பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் இலவசத் தொழில்பயிற்சியை நிறைவு செய்த 429 பேருக்குச் சான்றிதழ் மற்றும் 10 பேருக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளரும், கட்டடவியல் துறைப் பேராசிரியருமான பி.ஆர்.நாகராஜன் வரவேற்றார். ஈரோடு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எல்.பூபதி, சாய்ராம் அறக்கட்டளை நிறுவனர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு ஈரோடு தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளர் கே.கே.பாலுசாமி தனது சொந்த செலவில் தையல் இயந்திரங்களை வழங்கினார். மேலும், இலவசத் தொழிற்பயிற்சி பெற்ற ஆப்பக்கூடல், அத்தாணி, கோபி, பவானி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளைச் 429 பேருக்குச சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், பேராசிரியர்கள் ஆர்.பார்த்திபன், பி.கே.சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது: மு. வீரபாண்டியன்

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

மேட்டூா் அணை உபரிநீா் திட்டம் காடையாம்பட்டிக்கு விரிவுபடுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

