அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டக் கொடியேற்றம்

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டக் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :29 மார்ச் 2018, 3:08 am

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டக் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, கணபதி ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, யாக சாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, உற்சவமூர்த்திகளுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்பட பல்வேறு வகையான திரவியங்களுடன் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவையொட்டி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  
அதைத்தொடர்ந்து, பகல் 12.30 மணியளவில் கோயிலின் முன்பு உள்ள கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களின் "அரோகரா' கோஷத்துடன் சேவல் கொடி ஏற்றப்பட்டது. 
தொடர்ந்து,  திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
 பங்குனி உத்திர தேரோட்டம்  வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தவுள்ளனர். மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.