திமுக மண்டல மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கழிவறைகள் கிராம் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் திமுக மண்டல மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, கழிப்பறை வசதிக்காக 60-க்கும் மேற்பட்ட மொபைல் கழிப்பறைகள், நவீன முறையில் புதிதாகத் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டன. மாநாடு முடிந்த பின்னர், அந்த மொபைல் கழிவறைகள், கழிவறை வசதி இல்லாத கிராமங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கட்சியின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதேபோல, மாநாட்டில் நடப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி கொடிக் கம்பங்களையும், அனைத்து கிராமங்களிலும் அமைத்து, அந்தந்த ஊராட்சி செயலாளர் மூலமாகப் பராமரிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், முதல்கட்டமாக, பெருந்துறை ஒன்றியத்தில் இதுவரை பொதுக்கழிப்பிட வசதி செய்யப்படாமல் உள்ள பாரதி நகர் கிராமத்துக்கு நான்கு கழிவறைகள் வழங்கப்பட்டன. அதற்கு தண்ணீர் வசதியும் செய்யப்பட்டது.
இந்நிலையில், கிராமங்களுக்கு கழிவறைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளருமான முத்துசாமி பங்கேற்று, பாரதி நகரில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றினார். பின்னர், கழிவறைகளைப் பொதுமக்களுக்கு ஒப்படைத்தார்.
இதில், கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் கந்தசாமி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் சந்திரகுமார், மாநில ஆதி திராவிடர் நலக்குழுத் தலைவர் அந்தியூர் செல்வராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மாவட்டப் பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மிட்செல் ஸ்டார்க்!

காவியக் காதல் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - புகைப்படங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம்..! டைட்டில் டீசர் ரிலீஸ்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

