தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள்

அரசுப் பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On :14 மே 2018, 7:35 pm

அரசுப் பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு அருகே வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995-ஆம் ஆண்டு பிளஸ் 2 (வணிகவியல் பிரிவு) பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் 40 பேர், அவர்களின் குடும்பத்தினருடன் பள்ளியின் விளையாட்டுப் பயிற்சிக்கு உதவும் வகையில் விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் தங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள், மாற்றங்கள் குறித்த நிகழ்வுகளைப் பறிமாறிக் கொண்டனர். முன்னாள் தலைமையாசிரியர் ஜானகிராமன், ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
முன்னதாக, தங்களுடன் பயின்ற மாணவ, மாணவி, 2 ஆசிரியர்கள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி விளையாட்டு ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.