அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :14 மே 2018, 10:35 pm

DIN

திம்பம் மலைப் பாதையில் தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப் பாதையான திம்பம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் அபிமன்யு ஓட்டி வந்தார். 13-ஆவது வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்தார்.
விபத்து காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு மாநில வாகனங்களும் திம்பம், ஆசனூர், பண்ணாரியில் வரிசையாக அணிவகுத்து நின்றன. அங்கு வந்த மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.