சென்னிமலை பூங்கா நகரில் புதியதாக அமையவுள்ள எரிவாயு உருளைக் கிடங்குக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனு:
சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு உள்பட்ட பூங்கா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியில் புதியாக எரிவாயு உருளைக் கிடங்கு அமைப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு நடத்திச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்தக் கிடங்கு அமைப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும், தீ விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, பூங்கா நகர் பகுதியில் எரிவாயு உருளைக் கிடங்கு அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

