ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குடிநீர் கோரி தாசம்பாளையம் மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு தாசம்பாளையம் பகுதி மக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :21 மே 2018, 7:28 pm

குடிநீர் கேட்டு தாசம்பாளையம் பகுதி மக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
புன்செய் புளியம்பட்டியை அடுத்த பவானிசாகர் சாலையில் தாசம்பாளையம் உள்ளது. இங்குள்ள காலனி மக்களுக்கு தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் தண்ணீர் விநியோகிக்கவில்லை. மேலும், கடந்த சில நாள்களாக தண்ணீர் விநியோகம் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குப் பலமுறை புகார் அளித்தும் பலனில்லாததால் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.