பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29-முதல் நல வாரிய அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஈரோட்டில் மாவட்ட துணைத் தலைவர் மா.நாகப்பன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம், விபத்து மரண இழப்பீடு, இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோப்புகள் ஆண்டுக் கணக்கில் தீர்வு காணப்படாமல் உள்ளன. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த நுôற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில், ஓய்வூதியம் பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். அவர்களது வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியமும் முறையாக வழங்கப்படவில்லை. இதைத் தவிர, அற்ப காரணங்களுக்காக பல விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர். இதுபோன்ற அவல நிலையைக் கண்டித்தும்,விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உரிய தீர்வு கிடைக்கவும், நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மே 29-ஆம் தேதி முதல் நல வாரிய அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்பு (வீடு திரும்பாத) போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயலர் எஸ்.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலர்கள் ராஜேஷ், எஸ்.ராஜ்குமார், கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

