முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில், ராஜீவ் காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், துணைத் தலைவர் சாதிக்பாஷா, பொதுச் செயலர் மணி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் லோகேஸ்வரன், பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று தீவிரவாத கொடுஞ்செயலுக்கு எதிராக உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இதேபோல, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஈரோடு காமராஜர் உருவச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மண்டலத் தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், அரவிந்த்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், சச்சிதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

