ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக்கரை சோதனைச் சாவடி அருகே வாரம்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகள், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் மாடுகள் தரமானதாக உள்ள காரணத்தால் அவற்றை வாங்க கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இங்கு வாரம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு மாடுகள் வரத்து கணிசமாகவே இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கோடை மழை காரணமாக கடந்த வாரத்தைவிட விவசாயிகளின் வருகையும் குறைந்தே காணப்பட்டது.
இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியது:
தென் மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வழக்கம் போல வந்திருந்தனர். இந்த வாரச் சந்தையில் 300 பசு மாடுகள், 250 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 1000 முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளன. இந்த வாரத்தைப் பொறுத்தவரை சுமார் ரூ. 3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில முறைகேடுக்கு பின்னால் உள்ள அந்த அதிகார மையம் யார்? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

கணவருடன் கர்பக் காலத்தைக் கொண்டாடும் சமந்தா! எங்கே? எப்படி?

ஒரே அறையில் திருச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள்: குறைகளை தெரிவிக்க முடியாமல் மருத்துவமனை பணியாளா்கள், நோயாளிகள் அவதி






