பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் ரூ. 60.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் மேட்டூர் - பவானி பிரதான சாலை முதல் காவிரிக்கரை மயானம் வரையில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவருடன் கூடிய தார் சாலைப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார். அதே பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 10.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த கழிப்பிடமும் திறக்கப்பட்டது. இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலர் வி.எஸ்.சரவணபவா, ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எ.ஈஸ்வரமூர்த்தி, அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் வி.ராமகிருஷ்ணன், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

கந்தபுரம் கோயிலில் கும்பாபிஷேகம்

மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலயத்தில் அசன விருந்து
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

