பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை, சென்னிமலை சாலை, பணிக்கம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், போலீஸார் அங்கு சென்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி (30) என்பதும், பணிக்கம்பாளையத்தில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
இதேபோல, பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்க மாநில இளைஞர் ஆயினூர் (30) என்பவரையும், பணிக்கம்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்க மாநில இளைஞர் ஷோசரப்காஜு (33) என்பவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் தலா 500 கிராம் கஞ்சா என மொத்தம் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்!

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை 4% உயர்வு!

டி20 போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய புவனேஷ்வர் குமார்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

