சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த வீரர் இனியனுக்கு "ஒளிரும் ஈரோடு' அமைப்பு சார்பில் ரூ. 1.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 2 விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு "ஒளிரும் ஈரோடு' ஃபவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது.
அதன்படி சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த வீரர் இனியன் என்ற மாணவரின் திறமையைக் கண்டறிந்து அவரைத் தேர்வு செய்து கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்காக ரூ. 25 லட்சம் வரை "ஒளிரும் ஈரோடு' ஃபவுண்டேஷன் நிதியுதவி அளித்து ஊக்குவித்து வருகிறது.
ஈரோடு வீரர் இனியன் சென்ற 25.6.2018 முதல் 1.8.2018 வரை நடைபெற்ற 5 சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் அபுதாபியில் நடைபெற்ற அபுதாபி மாஸ்டர்ஸ் போட்டி 2018யில் 2,840 புள்ளிகளுடன் நான்காவது கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றுள்ளார். இவர் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கு இன்னும் 20 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. தொடர்ந்து 3 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
இம்மாதம், 1.9.2018 முதல் 8.9.2018 வரை இத்தாலியின்
திரிஸ்டியில் நடைபெறும் 20ஆவது சர்வதேச செஸ் போட்டியிலும், 9.9.2018 முதல் 16.9.2018 வரை இத்தாலியின் அமன்டியாவில் நடைபெறும் 16 ஆம் சர்வதேச செஸ் போட்டியிலும், 20.9.2018 முதல் 23.9.2018 வரை ஸ்லோவேனியா நாட்டின் முர்ஸ்கா சோபோடாவில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இலவற்றில் பங்கேற்பதற்காக ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலையை "ஒளிரும் ஈரோடு' ஃபவுண்டேஷன் அமைப்பின் செயலாளர் ந.கணேசன், இனியனின் தந்தை பன்னீர்செல்வத்திடம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

