/

சாய ஆலை திடக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சென்னிமலை அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள சாய திடக் கழிவால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Updated On :3 செப்டம்பர் 2018, 7:36 pm

சென்னிமலை அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள சாய திடக் கழிவால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
சென்னிமலை ஒன்றியம், முருங்கத்தொழுவு ஊராட்சி, கிழக்கு புதுப்பாளையம் அருகில் மைலாடி செல்லும் சாலையின் ஓரத்தில் அடுப்பு சாம்பலுடன் சாயப் பட்டறைகளில் உருவாகும் அடர் சாயக் கழிவுகளை மூட்டை மூட்டையாகக் கட்டி சிலர் கொட்டிச் சென்றுள்ளனர். 
இதுகுறித்து, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தொடர்ந்து இதுபோன்ற சாய திடக் கழிவுகளை சாலையில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.