புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கஞ்சா விற்ற இளைஞர்கள் 3 பேர் கைது

பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:35 pm

பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை, சென்னிமலை சாலை, பணிக்கம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பதாக  போலீஸாருக்கு  ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், போலீஸார் அங்கு சென்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். 
 விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி (30) என்பதும்,  பணிக்கம்பாளையத்தில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர். 
இதேபோல, பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்க மாநில இளைஞர் ஆயினூர் (30) என்பவரையும், பணிக்கம்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே கஞ்சா விற்ற மேற்கு வங்க மாநில இளைஞர் ஷோசரப்காஜு (33) என்பவரையும் கைது செய்தனர்.
 கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் தலா 500 கிராம் கஞ்சா என மொத்தம் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.