மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

எழுமாத்தூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட எழுமாத்தூர் கிராமம் பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட எழுமாத்தூர் கிராமம் பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 
மொடக்குறிச்சி தாலுகா, எழுமாத்தூர் கிராமம், ஆனந்தம்பாளையம், கரியாகவுண்டன்வலசு, வெள்ளப்பெத்தாம்பாளையம், வெப்பிலி, எழுமாத்தூர் பாண்டிபாளையம், சின்னுசாமிபுரம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் காலை 7 முதல் 10 மணி வரை கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மாட்டினங்களின் கோமாரி கால், வாய் நோயைக் கட்டுப்படுத்த 15 ஆவது சுற்றாக செப்டம்பர் 1 முதல் 21 ஆம் தேதி வரை 21 நாள்கள் கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  
இதுகுறித்து, எழுமாத்தூர் கால்நடை மருத்துவர் நல்லசாமி தெரிவித்ததாவது:
தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாடு, எருமை, கன்றுகளுக்கு கால், வாய் பகுதிகளில் கோமாரி நோய் தாக்காமல் காக்கும் வண்ணம் 15 ஆவது சுற்றாக தீவிர கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் அந்தந்த ஊர்களில் தினமும் காலை 7 முதல் 10 மணி வரை நடத்தப்படுகிறது. 10 மணிக்கு மேல் எழுமாத்தூர் கால்நடை மருத்துவ நிலையத்தில் வழக்கமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இம்முகாம் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. முகாமிற்கு கால்நடைகளைக் கொண்டு வர முடியாதவர்கள் தகவல் தெரிவித்தால் தடுப்பூசி போடப்படும். மேலும், விவரங்களுக்கு மருத்துவ நிலையத்தை அணுகலாம். இம்முகாமை கால்நடைகள் வளர்க்கும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.