தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தக் கோரி காவல் துறையிடம் மனு

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைத்தல் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள்

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைத்தல் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட காவல் துறையிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் அளித்துள்ள மனு:
செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் வைக்கப்படும் சிலை, ஊர்வலம் விதிகளை மீறாமல் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டி புதிய இடங்களில், போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. 
வன்முறையைத் தூண்டும் ஒலி முழக்கங்களை அனுமதிக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தளங்கள் உள்ள இடங்களில் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது. எளிதில் கரையும் களிமண் போன்றவற்றில் செய்யப்படும் சிலைகளைத் தவிர நீர் நிலைகளை மாசுபடுத்தும் ரசாயனத்தால் ஆன சிலைகளை அனுமதிக்கக் கூடாது. 
சிலைகள் ஊர்வலத்தில் அரசியல் கட்சிக் கொடி, அமைப்புகளின் கொடிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிசாமி, திராவிடக் கழகத்தின் மாநில அமைப்பாளர் த.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் மண்டல செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் ஆறுமுகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் செந்தில்குமார், தலித் விடுதலைக் கட்சி மாவட்டச் செயலாளர் கோபி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.