6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அக்டோபர் 28 இல் ஈரோடு தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விழா

ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவையின் 29 ஆம் ஆண்டு இலக்கிய விழா அக்டோபர் 28 ஆம் தேதி செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

Published On :


ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவையின் 29 ஆம் ஆண்டு இலக்கிய விழா அக்டோபர் 28 ஆம் தேதி செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு தமிழ்ச் சங்கம் உவமைக் கவிஞர் சுரதாவால் தொடக்கிவைக்கப்பட்டது. இதன் 29 ஆம் ஆண்டு இலக்கிய விழா ஈரோட்டில் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், கதை, மரபுக் கவிதை , புதுக் கவிதை, கட்டுரை, வெண்பா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குத் திருவள்ளுவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர், பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், வாரியார் ஆகியோரின் பெயர்களில் விருதுகளும் வழங்கப்படும்.
மேலும், துறை சார்ந்த விருதுகள், சாதனைச் செம்மல் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கவிமாமணி சேலம் பாலன், நிறுவனர், தலைவர், ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை, 38, கிருட்டிணசாமி வீதி, நகராட்சிக் குடியிருப்பு, ஈரோடு- 638 004 அல்லது 91500- 52927 , 79044-75399 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.