பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ ரத்த தானம்

ஜெயலலிதா பிறந்த தினத்தை ஒட்டி ஈரோடு மேற்குத் தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும்,

Updated On :25 பிப்ரவரி 2019, 10:12 am IST

ஜெயலலிதா பிறந்த தினத்தை ஒட்டி ஈரோடு மேற்குத் தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக ஈரோடு மாநகர் மாவட்டச் செயலருமான கே.வி.ராமலிங்கம் ரத்த தானம் அளித்தார்.
மாவட்ட அதிமுக சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.  
விழாவில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி,  மாநிலங்களவை உறுப்பினர் சி.செல்வக்குமார சின்னையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
அதைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பெரியார் நகர் பகுதிச் செயலர் மனோகரன் தலைமை வகித்தார் சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் முகாமைத் தொடங்கிவைத்து ரத்த தானம் அளித்தார். மேலும் ஏராளமான அதிமுக தொண்டர்களும் ரத்த தானம் செய்தனர். 
இதையடுத்து, மாவட்ட மாணவரணி சார்பில், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. விழாவில் அதிமுக பகுதிச் செயலர்கள் கே.சி.பழனிசாமி, ஜெகதீஷ், மாணவரணி மாவட்டச் செயலர் ரத்தன் பிரித்வி, இணைச்செயலர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.