ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தொல்லியல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் 40,000 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படும். அதன்படி குடமுழுக்கு முடிந்து 10 ஆண்டுகள் ஆன கோயில்கள் பட்டியலைக் கணக்கெடுத்து குடமுழுக்கு நடத்த அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஈரோடு நகரில் உள்ள பழமையான கோயில்களான கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், கஸ்தூரி அரங்கநாதர் கோயில்களில் தொல்லியல் துறை முதுநிலை வல்லுநர் அர்ஜுனன், இளநிலை உதவியாளர் உத்திராடம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.
இதில் கோயில் வளாகம், கோபுரங்கள், விமானம், சிற்பங்கள், கல்வெட்டுகள், கருவறை ஆகியவை பழமை மாறாமல் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை வல்லுநர் அர்ஜுனன் கூறியதாவது:
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு செய்வதற்கு முன்பு தொல்லியல் துறையின் சான்று பெறவேண்டும். இதற்காக தமிழகத்தில் குடமுழுக்கு முடிந்து 10 ஆண்டுகள் ஆன கோயில்களின் பட்டியலைத் தொல்லியல் துறைக்கு அளித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் மண்டல வாரியாக 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டக் கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டது.
"மிக பழமையான கோயில்களில் கருங்கல்லால் கட்டப்பட்ட சுவரில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. சிமெண்ட் கலவை பூசக்கூடாது. விரிசல் இருந்தால் சுண்ணாம்புக் கலவை கொண்டு பூச வேண்டும். புதிய கட்டுமானம் இருக்கக் கூடாது. மேலும் நவீனம் என்ற பெயரில் கோயில் வளாகத்தில் டைல்ஸ் போட்டிருக்கக் கூடாது. வர்ணம் பூசாமல் பழமையான முறையிலேயே கோயிலைப் பராமரிக்க வேண்டும்' என ஆய்வில் வலியுறுத்தப்பட்டது.
மேற்கூறியவற்றில் அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவற்றை முறையாக சீர்செய்த பின்னர்தான் அறநிலையத் துறைக்கு சான்றளிப்போம் என்றார்.
இதையடுத்து திண்டல் முருகன் கோயில், முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோயில், சூரம்பட்டி மாரியம்மன் கோயில், பிரப் சாலை செல்வ விநாயகர் கோயில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது கோயில் செயல் அலுவலர்கள் சீனிவாசன், கங்காதரன், அலுவலர் முதுநிலை உதவியாளர்கள், கிருஷ்ணகுமார், சேஷய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |


