ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியின் எனர்ஜி கிளப் சார்பில் ஆற்றல் பாதுகாப்பு

Updated On :25 பிப்ரவரி 2019, 10:16 am IST

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியின் எனர்ஜி கிளப் சார்பில் ஆற்றல் பாதுகாப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்பக் கருத்தரங்கம் கல்லூரித்  தலைவர் பி.வெங்கடாசலம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் மேட்டூர் அனல் மின் நிலைய மின்னியல் துறை உதவிப் பொறியாளர் ஆர்.சங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் ஆற்றல் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பொறியியல் படிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி கலந்துரையாடினார்.
கல்லூரி முதல்வர் ப.தங்கவேல் முன்னிலை வகித்தார். கல்லூரி இணைச் செயலர் ஜி.பி.கெட்டிமுத்து வரவேற்றார்.  
கருத்தரங்கில், துணை முதல்வர் எஸ்.பிரகாசம், இயந்திரவியல் துறைத் தலைவர் கே.சி.ஆனந்தன், எனர்ஜி கிளப் ஒருங்கிணைப்பாளர் ரத்தினவேல் சுப்பிரமணியம், பேராசிரியர்கள்,  இயந்திரவியல் துறை மற்றும் மின்னியல் துறை சார்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் கோ.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.