ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருந்த 2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே நாளில் அகற்றியது.
தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓடைகள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
உதவி சுற்றுச் சூழல் பொறியாளர்கள் மோகன், செல்வகுமார், உதவிப் பொறியாளர்கள் ராஜ்குமார், ஜோதி வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடையில் இருந்து கிறிஸ்துஜோதி பள்ளி வரையிலும், காலிங்கராயன் வாய்க்காலில் பேபி கால்வாய் பகுதியிலும், மரவாபாளையம் பகுதி, கங்காபுரம் நரிப்பள்ளம் ஓடை, ராசம்பாளையம் பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலும், முள்ளாம்பரப்பு, பவானி கோயில் ஆகிய பகுதிகளிலும் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து ஓரே நாளில் மட்டும் இரண்டரை டன் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
