பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகள், புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைப் பொழிவுக்குப் பின்  வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி 6 நாள்கள் நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 12:27 am IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைப் பொழிவுக்குப் பின்  வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி 6 நாள்கள் நடைபெற்றது. இதில், புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் 7 வனச் சரகங்கள் உள்ளன. மழைப் பொழிவுக்குப் பின் வனத்தில் வாழும் விலங்குகள், தாவரங்கள், மரங்கள், நீர்நிலைகள், வன உயிரினங்கள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்புப் பணி கடந்த 6 நாள்களாக நடைபெற்று புதன்கிழமை நிறைவுபெற்றது. 
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்லிடப்பேசி மென்பொருள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கணக்கெடுப்புப் பணி துவங்கப்பட்ட இடம், தூரம், அங்கு பார்த்தவற்றை பதிவு செய்வது என அந்தந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்தனர். மேலும், கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் குறித்து சுயபடம் எடுத்தும் பதிவு செய்தனர். இறுதியாக இப்பணி முடிவுறும் இடத்தில் அதனை நிறைவு செய்து உயர்அதிகாரிகளுக்குத் தகவல் பரிமாற்றம் செய்தனர்.
தவிர, வன ஊழியர்கள் ஜிபிஎஸ், ரேஞ்ச் ஃபைண்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொண்டனர். தலமலை, பவானிசாகர் வனப் பகுதியில் நேரடியாக புலிகளைப் பார்த்தனர். இப்பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம், புலிகளின் கால் தடம் அவற்றின் எச்சம் பதிவு செய்யப்பட்டது.
இதில், புலிகள் எண்ணிக்கை 74 இல் இருந்து 85 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அனைத்து வனச் சரகங்களிலும் புலியின் கால்தடம் பதிவாகியிருப்பதால் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு புலி இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ரேஞ்ச் ஃபைண்டர் மூலம் தொலைவில் உள்ள வன விலங்குகள் நடமாட்டத்தையும், நீர்நிலைகளையும் ஆய்வு செய்தனர். 5 கி.மீ. பரப்பளவுக்கு கண்ணில் தென்படும் வன விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள், மரங்கள் என அனைத்தையும் குறிப்பு எடுத்து அனுப்பினர். 
சத்தி புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, டி.என்.பாளையம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச் சரகத்தில் 46 குழுக்களில் 320 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர் தலைமையில் 5 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.