தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 

Updated On :24 ஜனவரி 2019, 12:25 am IST

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
45 வயதுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய மஸ்தூர் சங்கப் பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. 
சம்பவ இடத்துக்கு விரைந்த ஆப்பக்கூடல் போலீஸார், பேரூராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர். பணியாளர்களின் கோரிக்கையை எழுத்து மூலமாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால், போராட்டத்தைக் கைவிட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.