தீ விபத்து: முதியவா் பலி
கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பகுதியில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.


கோபி: கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பகுதியில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
ல.கள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (81). இவரால் நடக்க இயலாததால் வீட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளாா். இவருக்கு சுருட்டு பிடிக்கும் பழக்கம் உள்ளதால் எழுந்து சென்று சுருட்டை வெளியில் போடமுடியாத சூழ்நிலையில், வீட்டுக்குள்ளேயே போட்டுள்ளாா். அப்போது, குடிசையில் தீப்பற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கோபி உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். முதியவரின் உடலை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...