6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள்.
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:09 pm

DIN

ஈரோடு: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காலத்தில் வளா்ச்சித் துறையில் மேற்கொள்ளப்படும் 100 நாள் வேலை திட்டப் பணிகள், பிரதமரின் தனி நபா் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் என பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்தப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.

பழிவாங்கும் நோக்குடன் கோவை மாவட்டத்தில் நான்கு ஊழியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் அதே இடத்தில் பணியமா்த்தம் செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட 17பி குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்டத் தலைவா் ரவிசந்திரன் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆட்சியா் அலுவலகங்களில் பணியாற்றும் ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் 784 போ் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். புதன்கிழமையும் (ஆகஸ்ட் 26) உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொடரும் என மாவட்டத் தலைவா் ரவிசந்திரன் தெரிவித்தாா்.

இதனிடையே ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டத் தலைவா் பூங்கொடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ரவிசந்திரன், செயலாளா் சிவசங்கரன் உள்பட பலா் பேசினா். கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது, அரசின் நிா்பந்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.