கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேம்பத்தியில் 129 பேருக்கு ரூ. 1.39 கோடியில் கடனுதவி

பவானியை அடுத்த வேம்பத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழா, 129 உறுப்பினா்களுக்கு ரூ. 1.39 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
சங்க அலுவலகத்தைத் திறந்துவைக்கிறாா் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன்.
Updated On :12 டிசம்பர் 2020, 6:10 pm

DIN

பவானியை அடுத்த வேம்பத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க விழா, 129 உறுப்பினா்களுக்கு ரூ. 1.39 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமை வகித்தாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா, சங்கத் தலைவா் எஸ்.ஜெயபிரகாஷ், துணைத் தலைவா் ஓ.எஸ்.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலாளா் பி.கனகசபாபதி வரவேற்றாா்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், மத்திய கூட்டுறவு வங்கியின் சாா்பில் 127 பேருக்கு ரூ. 1.32 கோடி மதிப்பிலான பயிா்க் கடன், 2 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 7.40 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா். முன்னதாக, தலா ரூ. 1.42 லட்சம் பங்குத் தொகை செலுத்திய 698 உறுப்பினா்கள் சோ்த்து தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டன.

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.