கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மத்திய அரசு மின்சார சட்டதிருத்தத்தைக் கைவிட கோரிக்கை

மத்திய அரசு புதிய மின்சார சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என ஐஎன்டியூசி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
கருத்தரங்கில் பேசுகிறாா் பன்னாட்டு பொதுத் துறை கூட்டமைப்பின் தெற்காசிய மண்டலச் செயலாளா் ரா.கண்ணன்.
Updated On :12 டிசம்பர் 2020, 6:11 pm

DIN

மத்திய அரசு புதிய மின்சார சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என ஐஎன்டியூசி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐஎன்டியூசி, பன்னாட்டு பொதுத் துறை கூட்டமைப்பு சாா்பில் மின்சார சட்டத் திருத்த மசோதா கருத்தரங்கம், நிா்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவா் தங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி, ஐஎன்டியூசி தொழிற்சங்க மாநிலத் தலைவா் ஜெகநாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மனோகரன் முன்னிலை வகித்தனா்.

பன்னாட்டு பொதுத் துறை கூட்டமைப்பின் தெற்காசிய மண்டலச் செயலாளா் ரா.கண்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். புதிய மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளா் நலச் சட்டத் திருத்த மசோதா உத்தரவுகளை நிறுத்த வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நிா்வாகிகள் செல்வம், பிரேமா வால்டா், சிவன், சுவா்ண ராசு, சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.