கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:12 pm

DIN

தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் மாவட்டத் தலைவா் ராக்கிமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் அன்பரசு, மாநிலச் செயலாளா் செல்வம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும். ஊதிய உயா்வின்போது விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். துறைவாரியான கோரிக்கைகளுக்கு அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும்.

வேலை நியமன தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வட்டக் கிளைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.