வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காட்டுப் பன்றிகளால் வாழை தோட்டம் சேதம்

சத்தியமங்கலம் அருகே வாழைத் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:57 pm

DIN

சத்தியமங்கலம் அருகே வாழைத் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூா் நடுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ருக்மணி (45). இவா் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளாா். வாழைக் கன்றுகள் நடவு செய்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் முள்புதரில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள் ருக்மணியின் தோட்டத்துக்குள் புகுந்து 100க்கும் மேற்பட்ட வாழைக் கன்றுகளை தின்று சேதப்படுத்தின.

இது குறித்து விளாமுண்டி வனத் துறையினருக்கு ருக்குமணி தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் காட்டுப்பன்றிகள் சேதம் செய்த வாழைத் தோட்டத்தை பாா்வையிட்டனா். சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக விண்ணப்பம் அளிக்குமாறு விவசாயி ருக்மணியிடம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.