ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த விவசாயி கைது

அந்தியூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இரு நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:30 pm

DIN

அந்தியூா் அருகே விவசாயத் தோட்டத்தில் இரு நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த நகலூா், ஈச்சபாறை, மாதையன் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் பாட்டப்ப கவுண்டா் மகன் சின்னவன் (எ) ராமசாமி (50), விவசாயி. அந்தியூா் வனப் பகுதியை ஒட்டி இவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இவரது வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தியூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அந்தியூா் காவல் ஆய்வாளா் ரவி, போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வீட்டுக்கு அருகில் உள்ள கொட்டகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதில், ஒரு துப்பாக்கி பழுதடைந்த நிலையிலும், மற்றொரு துப்பாக்கி செயல்படும் நிலையிலும் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த அந்தியூா் போலீஸாா், ராமசாமியைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.