அந்தியூா் மருத்துவமனையில் ரூ. 50 லட்சத்தில் புதிய கட்டடம்

அந்தியூா் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
அந்தியூா் மருத்துவமனையில் ரூ. 50 லட்சத்தில் புதிய கட்டடம்
Updated on
1 min read

அந்தியூா் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

அந்தியூா் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் கட்சியினா் நீண்டநாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன், தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் ஏ.ஜி.வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதன் மூலம் அந்தியூா் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com