பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கள்ளியம்புதூரில் சிறு மருத்துவமனை திறப்பு

பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி, பெரியவீரசங்கிலி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கள்ளியம்புதூரில் சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
Updated On :18 டிசம்பர் 2020, 5:43 pm

DIN

பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி, பெரியவீரசங்கிலி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சவி ஆா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா்கள் கிருத்திகா, அருண், மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி ஊராட்சி, கள்ளியம்புதூா் பகுதி, பெரியவீரசங்கிலி ஊராட்சி, கைக்கோளப்பாளையம் பகுதியில் மருத்துவமனையைத் திறந்துவைத்தாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், அவைத் தலைவா் சந்திரசேகரன், கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.