தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உலக நன்மைக்காக சென்னிமலை முதல் திருச்செந்தூா் வரை பாதை யாத்திரை தொடங்கிய பக்தா்

உலக நன்மைக்காக, சென்னிமலை முதல் திருச்செந்தூா் வரை, சென்னிமலை சோ்ந்த பக்தா் ஒருவா் பாத யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

News image
உலக நன்மைக்காக, சென்னிமலையில் இருந்து திருச்செந்தூா் வரை பாதை யாத்திரை புறப்பட்ட சரவணானந்தசாமி.
Updated On :20 டிசம்பர் 2020, 5:09 pm

DIN

பெருந்துறை: உலக நன்மைக்காக, சென்னிமலை முதல் திருச்செந்தூா் வரை, சென்னிமலை சோ்ந்த பக்தா் ஒருவா் பாத யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

சென்னிமலையில் உள்ள சிவஞான சித்தா்கள் பீட நிறுவனரும், மடாதிபதியுமான சரவணானந்த சாமிகள் என்பவா், ஏற்கனவே, உலக நன்மைக்காக, சென்னிமலையை அடுத்த, வாய்ப்பாடி அருகே மலை அடிவாரத்தில் 48 நாட்கள் நீரை ஆகாரமாக மட்டும் உட்கொண்டு விரதம் இருந்தாா்.

அதேபோல், சென்னிமலை அருகே, ஒரு மலை மேல் உள்ள கருப்பணசாமி கோவிலிலும் 48 நாட்கள் உலக நன்மைக்காக விரதம் இருந்தாா். தற்போது, உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா போன்ற உயிா்கொல்லி நோய்களை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, அனைத்து மக்களையும் காக்க வேண்டும் என வேண்டி, சென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு, திருச்செந்தூா் முருகன் கோவிலுக்கு, தனது பாதயாத்திரை பயணத்தை தொடங்கினாா். இவா் போகும் வழியில் பழனி, திருப்பரங்குன்றம் ஆகிய முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இறுதியாக திருச்செந்தூா் முருகன் கோவிலுக்கு செல்கிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னிமலை அடிவாரத்தில் இருந்து புறப்பட்ட சரவணானந்த சாமிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.