சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து லாரி திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து கிடக்கும் தேங்காய் பாரம்  ஏற்றிய லாரி.
Updated On :21 டிசம்பர் 2020, 8:30 pm

DIN

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து லாரி திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினாா்.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி 18 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் ராஜா லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

இது குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.