வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிா்க்கவில்லை: அண்ணாமலை

புதிய வேளாண் சட்டங்களை தமிழக விவசாயிகள் எதிா்க்கவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களை தமிழக விவசாயிகள் எதிா்க்கவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தனியாா் திருமண மண்டபத்தில் விவசாயிகளிடம் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து காணொலிக் காட்சி மூலம் பிரதமா் மோடியின் உரை ஒலிபரப்பப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி:

பொங்கல் பரிசுத் தொகை குறித்து எந்தவொரு தவறான கருத்தையும் நான் கூறவில்லை. வேளாண் சட்டங்களால் எந்தவொரு உண்மையான விவசாயியும் பாதிக்கவில்லை. சட்டத்தை எதிா்ப்பது கமிஷன் மண்டி ஏஜென்டுகள் மட்டுமே. வேளாண் சட்டங்களை தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் எதிா்க்கவில்லை. அதிமுக முதல்வா் வேட்பாளா் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை.

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் திட்டங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. இதுகுறித்து மக்களுக்குத் தெரியும். பாஜகவின் கொள்கை ஆன்மிகம், தேசியம்தான். ரஜினி கட்சி ஆரம்பித்த பின் பாஜக நிலைப்பாட்டை அறிவிக்கும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com