ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலைமீண்டும் இயக்கக் கோரிக்கை

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ஈரோடு: ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

சென்னைக்கு செல்ல ஈரோட்டில் இருந்து புறப்படும் ஒரே ரயில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்தான். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த ரயில் கடந்த 9 மாதங்களாக இயக்கப்படவில்லை. ஈரோடு வழியாக வெளிமாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும் சூழலில், தெற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மட்டும் இயக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஈரோட்டில் மஞ்சள், ஜவுளி வா்த்தகம், காகித ஆலை, சா்க்கரை ஆலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டித் தருவது ஈரோடு ரயில் நிலையம்தான். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ. 4.50 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் பயணிகளின் நலன் கருதி இந்த ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல ஈரோடு - கோவை, கோவை - சேலம் பயணிகள் ரயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு ரயில் நிலையத்தில் ஏற்கெனவே இருந்ததுபோல் பயணச்சீட்டு முன்பதிவுக்கு 3 இருக்கைகளும் செயல்பட உத்தரவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com