தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வேலைவாய்ப்புப் பதிவை மாற்றுவதற்கான வழிமுறைகள் மாற்றம்

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கான வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:25 pm

DIN

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கான வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு இதுவரை வட்டாட்சியா் அளவில் வழங்கப்படும் குடும்ப குடி பெயா்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை அல்லது ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது மனுதாரா் சாா்பில் சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் என ஏதாவது ஒரு ஆவணத்தை மட்டும் சமா்ப்பித்தால் போதுமானது.

இவற்றை தாக்கல் செய்து பிற மாவட்டத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.