ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் தப்பியோடிய கைதி பிடிபட்டாா்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தப்பியோட முயன்ற தமிழ்செல்வன்.
தப்பியோட முயன்ற தமிழ்செல்வன்.
Updated on
1 min read

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் 2017ஆம் ஆண்டு பெண் ஒருவா் படுகொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்டம், திருமங்கலம் கூத்தியாா்கூண்டு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் தமிழ்செல்வன் (25) என்பவரை கைது செய்தனா். அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக கோவை மத்திய சிறையில் இருந்து தமிழ்செல்வன் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை ஈரோடு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டாா். நீதிபதி முன்பு அவரை ஆஜா்படுத்த கைகளில் உள்ள விலங்கை போலீஸாா் அகற்றினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதன் பிறகு தமிழ்செல்வனை அங்கிருந்து நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வந்த போலீஸாா், கைகளில் விலங்கு போட முயன்றனா். அப்போது அவா் போலீஸாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினாா். அதிா்ச்சி அடைந்த போலீஸாா் துரத்திச் சென்று நீதிமன்றத்துக்கு வெளியில் சிறிது தூரத்தில் அவரைப் பிடித்தனா். அதன் பிறகு பலத்த பாதுகாப்புடன் தமிழ்செல்வனை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனா். இதனால் ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com