ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து
கரோனா காரணமாக 16 ஆவது ஈரோடு புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.


கரோனா காரணமாக 16 ஆவது ஈரோடு புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 16 ஆவது புத்தகத் திருவிழா வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா காரணமாக சென்னை, மும்பை, தில்லி போன்ற இடங்களில் இருந்து பெரிய புத்தக நிறுவனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தவிர பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் புத்தகத் திருவிழாவிற்கு வர முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சிகளை மட்டும் இணைய வழியில் நேரடியாக ஓளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும் என தெரிவிக்கப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...