காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி வடமாநில சிறுவன் சாவு

பல் துலக்க வேப்பங்குச்சி ஒடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வட மாநில சிறுவன் உயிரிழந்தார்.

News image
Updated On :18 மே 2020, 7:48 am

DIN

ஈரோடு: பல் துலக்க வேப்பங்குச்சி ஒடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வட மாநில சிறுவன் உயிரிழந்தார்.

பிகார் மாநிலம் ஜமூல் மாவட்டம் லட்சுமிபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்குமார்(19). இவர் தனது தம்பி ரூபேஸ்குமார் ராய்(14) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சோலார் புதூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை வளாகத்தில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ரூபேஷ்குமார் ராய் பல் துலக்க வேப்பங்குச்சியை உடைக்க இரும்பு கம்பியில் மரக்கிளையை அடித்துள்ளார். அப்போது மரத்தின் அருகில் இருந்த மின்சார ஒயர் மீது எதிர்பாராதவிதமாக கம்பி பட்டது. இதில் ரூபேஷ்குமார்ராய் மீது மின்சாரம் பாய்ந்தது. மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரூபேஷ்குமார்ராய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.