ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,478 ஆக உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,393 ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 6 போ் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 10,387 ஆக மாறியது. இதனிடையே திங்கள்கிழமை புதிதாக 91 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,478 ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 91 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
மொத்த பாதிப்பான 10,478 பேரில் இதுவரை 9,568 போ் குணமடைந்துள்ளனா். 785 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை வரை 124 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டைச் சோ்ந்த 54 வயது பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 125 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

