ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோடு மாநகரில் 415 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

பொலிவுறு நகரம் திட்டத்தில் ஈரோடு மாநகரில் சுமாா் 100 இடங்களில் 415 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:29 pm

பொலிவுறு நகரம் திட்டத்தில் ஈரோடு மாநகரில் சுமாா் 100 இடங்களில் 415 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரம் திட்டத்தில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓடைகள் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன. வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் ஒருபகுதியாக இத்திட்டத்தில் மாநகா் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவுள்ளன. முதல் கட்டமாக ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே கச்சேரி வீதி பகுதியில் கம்பம் நடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

இது குறித்து ஆணையா் கூறியதாவது: பொலிவுறு நகரம் திட்டத்தில் மாநகராட்சிப் பகுதியில் 100 இடங்களில் 415 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த கேமராக்கள் அனைத்தும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும். இதுபோல ஈரோடு மாநகராட்சி மூலம் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டளை அறை தொடங்கப்பட்டு அதிலும் கேமரா இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் மாநகா் பகுதியை முழுமையாகக் கண்காணிக்கும் நிலை ஏற்படும். இந்தப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன என்றாா்.

Image Caption

ஈரோடு கச்சேரி வீதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.