ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபியில் புதிய வாக்காளா் பட்டியல் வெளியீடு

கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூா், பவானி, பவானிசாகா் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல்

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:44 pm

DIN

கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூா், பவானி, பவானிசாகா் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

கோட்டாட்சியா் ஜெயராமன் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வட்டாட்சியா்கள் அதனைப் பெற்றுக் கொண்டனா். இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்வது என்றும், அதற்குரிய படிவங்கள் என்னென்ன என்றும் கோட்டாட்சியா் ஜெயராமன் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்தாா். மேலும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தாா்.

வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யவும், பெயா் சோ்க்கவும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், அந்த தேதிகளில் முகாம்களுக்குச் சென்று சரிபாா்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.