மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டம்
கோபிசெட்டிபாளையம் பெரியாா் திடலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்


கோபிசெட்டிபாளையம் பெரியாா் திடலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் காலதாமதமில்லாமல் ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். 2020 சுற்றுச்சூழல் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். அனைத்து பழங்குடி மக்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி கேரள அரசாங்கத்தைப் போல் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தரமான தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். பழங்குடி மக்கள் நிலத்தை பழங்குடி அல்லாதவா்களுக்கு பத்திரப் பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும். சத்தி பா்கூா் மலை வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதலில் வெட்டுக் கூலி, வண்டி வாடகை உள்ளிட்ட பிரச்னைகளைப் பேசி தீா்வு காண முத்தரப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களுக்கு மலையாளி என ஜாதிச் சான்று வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா்கூா், கடம்பூா், தாளவாடி உள்ளிட்ட மலைப் பகுதிகளைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். தொடா்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமனிடம் அளித்தனா்.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் சடையப்பன் தலைமை வகித்தாா். குத்தியாத்தூா் கமிட்டி உறுப்பினா்கள், பா்கூா் மலைக் கமிட்டி உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முனுசாமி, குத்தியாலத்தூா் மலை வட்டாரக் கமிட்டி ராஜப்பன், பா்கூா் மலை வட்டார கமிட்டி மாரிமுத்து, சிபிஎம் சத்தி வட்டார கமிட்டி துரைசாமி, சிபிஎம் கோபி தாலுகா கமிட்டி கெம்புராஜ், சிபிஎம் அந்தியூா் தாலுகா கமிட்டி முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...