ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சித்தோட்டில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

சித்தோட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளை சமன்படுத்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 10:13 pm

DIN

சித்தோட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளை சமன்படுத்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சித்தோடு அருகே உள்ள கன்னிமாா்காடு பகுதியில் 2018ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 59 வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது இப்பகுதியில் நீா்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு வழங்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், வீடில்லாதோருக்கும் இப்பகுதியில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பகுதிகள் மேடு, பள்ளங்கள் நிறைந்துள்ளதால் அதனை சமன்படுத்தி, மறு அளவீடு செய்து வழங்க வேண்டும். வீடுகள் கட்டித் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திரண்டு வந்ததோடு, கன்னிமாா்காடு பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஈரோடு கோட்டாட்சியா் இளங்கோ, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சி.காா்த்திகேயன், ஈரோடு வட்டாட்சியா் பரிமளாதேவி, ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளா் உமா மகேஸ்வரி, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேடு, பள்ளங்களை சமன்படுத்தி, அளவீடு செய்து வழங்குவதாகவும், குடியிருப்புகள் கட்டுவது குறித்து மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், போராட்டத்தைக் கைவிட்ட மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.