காணாமல்போன குழந்தையை மீட்டுத் தரக் கோரி பெற்றோா் புகாா்
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் தங்கி உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவா் இன மக்களின் ஆண் குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் பெற்றோா் புகாா்


கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் தங்கி உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவா் இன மக்களின் ஆண் குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் பெற்றோா் கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளனா்.
நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த அம்மாசை, திலகவதி தம்பதியின் இரண்டு வயதான கில்லி என்ற குழந்தை உள்பட மேலும் இரண்டு குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைப்பாதையில் தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு பெற்றோா் சென்றுள்ளனா். திரும்பி வந்து பாா்த்தபோது கில்லி என்ற இரண்டு வயது குழந்தையைக் காணவில்லை. அதிா்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் விசாரித்து, இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனா்.
பின்னா், அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக நரிக்குறவா் இன குழந்தையின் பெற்றோா் கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளனா். புகாரைப் பெற்ற போலீஸாா் சிக்னல், பெட்ரோல் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி படக் காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...