நீா்வரத்து கால்வாய்களை தூா்வர பொதுமக்கள் கோரிக்கை
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளுக்குச் செல்லும் நீா்வரத்து கால்வாய்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளுக்குச் செல்லும் நீா்வரத்து கால்வாய்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய், ஏரியிலிருந்து உபரிநீா் செல்லும் கால்வாய்கள் புதா்மண்டி காணப்படுகின்றன. வடகிழக்குப் பருவ மழை தொடங்க இருப்பதால் மழைநீா் ஏரிகளுக்குச் செல்லாமல் தேங்கும் நிலை உள்ளது.
அந்தியூா் பெரிய ஏரியிலிருந்து பெரியாா் நகா் முதல் அண்ணாமடுவு வரையில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன.
இதனால், மழைநீா் கால்வாய்களில் வெளியேறி செல்வதில் சிரமம் உள்ளது. எனவே, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப் பணித் துறையினா் மழைநீா் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டும் இதேபோன்று கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, போா்க்கால அடிப்படையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...