பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெண் எஸ்.ஐ.கள் அளித்த பாலியல் புகாா்: விசாரணை அறிக்கை டிஜிபி-க்கு அனுப்பிவைப்பு

காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு பெண் உதவி ஆய்வாளா்கள் அளித்த பாலியல் புகாா் தொடா்பான விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:30 pm

DIN

காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு பெண் உதவி ஆய்வாளா்கள் அளித்த பாலியல் புகாா் தொடா்பான விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவா், அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரையிடம் அண்மையில் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, புகாா் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் புகாா் தெரிவித்த பெண் காவல் உதவி ஆய்வாளா்கள், புகாருக்கு உள்ளான காவல் அதிகாரி, தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் அனைத்து நிலை காவலா்கள், தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி இடம் மாற்றம் செய்யப்பட்ட பெண் போலீஸாா் ஆகியோரிடம் குழுவினா் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணை முடிந்த நிலையில் அறிக்கை உயா் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை கூறியதாவது:

தொழில்நுட்ப பிரிவு பெண் காவல் உதவியாளா்கள் அளித்த பாலியல் புகாரின் பேரில் ஏடிஎஸ்பி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை இயக்குநா் முடிவு செய்வாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.