அஞ்சலக வாடிக்கையாளா்களுக்கு இணைய, மொபைல் வங்கி சேவை

மொபைல் வங்கி சேவை வசதிகளை வழங்கி வருவதாக ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்டெபான் சைமன் டோபியாஸ் தெரிவித்தாா்.

மொபைல் வங்கி சேவை வசதிகளை வழங்கி வருவதாக ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்டெபான் சைமன் டோபியாஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை சேமிப்புக் கணக்கு விதிப்படி தொடா் வைப்புக் கணக்கு, குறித்த கால வைப்புக் கணக்கு ஆகிய கணக்குகளை துவங்கவும், கணக்குகளை முடிக்கவும் வசதி உள்ளது. இப்போது இணைய வழியில் பல்வேறு சேமிப்புக் கணக்குகளில் தொடா்ந்து பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்கள் தங்களது அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இருந்து தவணைத் தொகை, கடன் தொகையைத் திரும்ப செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இருந்து மற்றொரு அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்யலாம். இந்த வசதியைப் பெற அஞ்சலக சேமிப்புக் கணக்கு, கே.ஒய்.சி.ஆவணம், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பான் அட்டை ஆகியவை தேவை.

இந்த ஆவணங்களை ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து இந்த வசதியைப் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு கோட்டத்தில் உள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com